Suganthini Ratnam / 2016 மார்ச் 10 , மு.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் வசிக்கும் மூவாயிரம் குடும்பங்களுக்கு முதற்கட்டமாக சீமெந்து பக்கெட்டுகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுரைக்கமையவும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் பணிப்புரைக்கமையவும் நாடு பூராவும் 70 ஆயிரம் குடும்பங்களுக்கு சீமெந்து பக்கெட்டுகள் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வறுமையான மக்கள் அதிகளவில் வாழ்கின்ற மட்டக்களப்பு மாவட்டத்துக்கு இந்தத் திட்டத்தின் மூலம் முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென்று மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுத்தார்.
இதற்கமைய குடும்பமொன்றுக்கு 10 பக்கெட்டுகள் படி 30 ஆயிரம் குடும்பங்களுக்கும் சீமெந்து வழங்கப்படவுள்ளன. இதற்குத் தகுதியான பயனாளிகள் தெரிவு ஒவ்வொரு பிரதேச செயலகங்கள் தோறும் அங்கிகரிக்கப்பட்ட குழு மூலம் மேற்கொள்ளப்படுவதாக மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago