Niroshini / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக்கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் நேற்று திங்கட்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவராக ஏற்கனவே பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களாக பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சிறிநேசன் ஆகியோர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை,கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்தின் நஸீர் அகமட் அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
8 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
22 Dec 2025