Suganthini Ratnam / 2016 ஜூன் 16 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, மாவடிவேம்புப் பிரதேசத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினரால் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட முகாமில் புதன்கிழமை (15) மாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத் தீ விபத்துக் காரணமாக இராணுவத்தினரால் ஏற்கெனவே புதைக்கப்பட்டிருந்த நிலக்கண்ணிவெடிகள் வெடித்ததாகவும் முகாமைச் சுற்றி பலத்த சத்தத்துடன் பெரும் புகைமூட்டம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து தடைப்பட்டிருந்ததாகவும் அப்பகுதித் தகவல்கள் தெரிவித்தன.

2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025