2025 மே 03, சனிக்கிழமை

மகள் துஷ்பிரயோகம்: தந்தை கைது

Editorial   / 2023 ஏப்ரல் 26 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

பொத்துவில் பொலிஸ் பிரிவில்  தனது 14 வயதுடைய மகளான  சிறுமியை  பாலியல் துஸ்பிரயோகம் செய்துவந்த தந்தை  புதன்கிழமை (26) கைது செய்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

அவர், பொலிஸ் சிவில் பாதுகாப்பு உத்தியோகராக கடைமையாற்றிவருகின்றார்.

 14 வயது சிறுமியை அவரது தந்தையார் கடந்த 3 வருடங்களாக பாலியல் துஸ்பிரயோகம் மேற் கொண்டுவந்த நிலையில் தேசிய சிறுவர் பாதுகாப்பு சபையின் அவசர பிரிவான 1929 தொலைபேசி இலக்கத்துக்கு பாதிக்கப்பட்ட சிறுமி முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து பொத்துவில் பிரதேசத்தில் பொலிஸ் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிவரும் 38 வயதுடைய சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X