2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

’மக்களின் விடயங்களுக்குப் பதிலளிக்காவிடின் எதிர்ட்கட்சி வரிசையில் அமரத் தயார்’

Suganthini Ratnam   / 2017 ஜூலை 10 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

'எமது மக்கள் சார்பாக நாம் குரல் கொடுக்கும் விடயங்களுக்கு இந்த அரசாங்மானது தக்க பதில் அளிக்காவிட்டால், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நான், எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கும்; தயாராக உள்ளேன் என்பதைப் பகிரங்கமாகக் கூற விரும்புகின்றேன்' என, மு.காவின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

'இது பற்றி நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே நான் மிகவும் காரசாரமாகப் பேசியுள்ளேன்' எனவும் அவர் கூறினார்.
 

'முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சமகாலச் சவால்கள்' எனும் தொனிப்பொருளில் உரையரங்கு,  ஏறாவூர் அலிகார் தேசிய கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (9) இரவு நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது,'அடிமட்ட மக்கள் ஏராளமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றார்கள்.  

'மக்கள்; எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தங்களது பிரதிநிதிகள், அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மூலமாக தீர்வைப் பெற்றுத்தர வேண்டும்; என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

'இதனை நாம் கவனத்திற்கொண்டு செயற்படும்போது,  எங்களுக்கு இனவாதிகள் சேறு பூசுகின்றார்கள். அதற்கு நாம் ஒருபோதும் பயப்படப் போவதில்லை. ஏனென்றால், அனைத்து மக்களுக்காகவும் நாம் குரல் கொடுக்கின்றோம்' என்றார்.

 'உண்மையான இணக்கப்பாடு இந்த நாட்டில் ஏற்பட வேண்டுமாயின், புரையோடிப் போயுள்ள  பிரச்சினைகள் நல்லாட்சி அரசாங்கத்தின் மூலமாகத் தீர்க்கப்பட வேண்டும். ஆனால், இந்த அரசாங்கத்திலுள்ள சில அமைச்சர்கள், அமைச்சு அதிகாரிகள் எங்களுக்கும் நல்லிணக்கத்துக்கும் பல பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றார்கள்.

'இந்த நாட்டின் இறைமைக்கும் தேசிய சௌஜன்ய வாழ்வுக்கும் தங்களை அர்ப்பணித்து வாழும் முஸ்லிம் சமூகத்துக்கு அநீதி  இழைக்கின்றார்கள். முஸ்லிம்களுக்குத் துரோகம் இழைக்கும் உள்நாட்டு, வெளிநாட்டுச் சக்திகளுக்கு உதவுகின்றார்கள். இந்த அரசாங்கத்திலுள்ள சில அமைச்சர்களே முஸ்லிம் சமூகத்துக்கு அநியாயம் செய்யும் நிலைமை இப்போது உள்ளது.
'முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து இன்னல்களுக்கு உள்ளாக்குவது பொறுத்துக்கொள்ளக் கூடியவை அல்ல' என்றார்.

 'மேலும், 33 சதவீதமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்கின்ற முஸ்லிம்கள், அம்மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 2 தொடக்கம் 3 சதவீதமான நிலப்பரப்பிலேயே வாழ்கின்றார்கள். இதுவும் அநீதியாகும். இதற்கும் குரல் கொடுக்கும் தார்மீக உரிமை எனக்குண்டு' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X