2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மக்களை தாக்கியவர்களுக்கு விளக்கமறியல்

Editorial   / 2020 மே 31 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம், கனகராசா சரவணன்

மட்டக்களப்பு, வாகனேரி குளத்துமடு பகுதியில், சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்தவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதலை மேற் கொண்ட 9 பேரையும்  இம்மாதம் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, வாழைச்சேனை  நீதவான் நீதிமன்ற பதில் நீதவான், இன்று (31)  உத்தரவிட்டார்

சந்தேகநபர்கள் 09 பேரும், நேற்று (30) மாலை கைது செய்யப்பட்டனரென, வாழைச்சேனை பிரதேசத்துக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜீ.எம்.ஜெயசுந்தர தெரிவித்தார்.

இதன்போது மணல் ஏற்ற பயன்படுத்தப்படும் உழவு இயந்திரங்கள் 02, மோட்டார் சைக்கிள்கள் 05 என்பனவும் கைப்பற்றப்பட்டிருந்தன.

குறித்த நபர்களை, பொலிஸ் நிலையத்தில் வந்து சரணடையுமாறு தாம் அழைப்பு விடுத்தபோதிலும் அவர்கள் அதனை மறுத்து, காட்டுப் பகுதியில் தலைமறைவாகியிருந்தனர் எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது தப்பியோட முயற்சித்த வேளையில், அவர்கள் கைது செய்து, நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X