Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 ஒக்டோபர் 29 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டை மீட்டெடுப்பதற்கு, இந்நாட்டின் மீது உண்மையான பற்றும் தூரநோக்கும் கொண்ட பலமான மூன்றாவது அரசியல் சக்தியொன்றின் அவசியம், காலத்தின் தேவையாக மாறியுள்ளதென, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.
இவ்வாறானதொரு மூன்றாவது சக்தியைக் கட்டியெழுப்புவதற்கு, இன, மத, கட்சி வேறுபாடின்றி, அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டுமென்றும், அம்முன்னணி தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலை குறித்து, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அந்த அறிக்கையில், "2015 ஜனவரி 08 ஆம் திகதி, இந்த நாட்டின் பெரும்பான்மையானோர், பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவுக்கு ஓர் ஆணையை வழங்கினர். இதே ஆணையும் கடப்பாடும், ஜனாதிபதிக்கு மட்டுமல்ல, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் உள்ளது.
“எனினும், இந்த மக்கள் ஆணையை இரு தரப்பினருமே முறையாக மதித்து செயற்படவில்லை என்பது கவலைக்குரியது.
“எனவே, இனிமேலாவது அன்று மக்கள் வழங்கிய ஆணையை மதித்து நடக்க வேண்டுமென, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, இரு தரப்பினரையும் வேண்டிக் கொள்கிறது" என்று தெரிவித்தார்.
இந்த அரசியல் குழப்பங்களுக்கு காரணமாக அமைந்த, ஜனாதிபதிக்கும் பிரதமர் ரணிலுக்கும் இடையிலான முரண்பாடுகள், மக்கள் நலனையோ, நாட்டு நலனையோ அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கவில்லை என்றும், அம்முன்னணி விசனம் வெளியிட்டது.
நாடாளுமன்றத்தில் எந்தவொரு தரப்பும் பெரும்பான்மையைப் பெற்றிருக்கவில்லை என்று தெரிவித்த அம்முன்னணி, இவ்வாறான சூழலில், 2015ஆம் ஆண்டில் மக்கள் ஆணையின் கால எல்லை முடியும் வரை அரசாங்கத்தைத் தொடர்ந்தும் கொண்டு செல்கின்ற பொறுப்பு, நாடாளுமன்றத்துக்கே உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
12 minute ago
26 minute ago