2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

மக்கள் குறை கேட்டல்

கே.எல்.ரி.யுதாஜித்   / 2017 டிசெம்பர் 06 , பி.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலகத்தின் பங்களிப்புடன், இளைஞர் அபிவிருத்தி அகத்தின் ஏற்பாட்டில் பிரதேச மக்கள் குறைகேள் மன்ற நிகழ்வு, நேற்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் 21 துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டு, மக்களின்  பிரச்சினைகளுக்குப் பதிலளித்ததுடன், தமது கடமைகளையும் தெளிவுபடுத்தினர்.

கோரளைப்பற்று வடக்கு பிரதேச உதவி பிரதேச செயலாளர் ஏ.அமலனி, தலமையில்  நடைபெற்ற இந்நிகழ்வில் பல்துறை அதிகாரிகளும் 135 பொதுமக்கள் வரைக் கலந்துகொண்டனர். 

நுண்கடன் காரணமாகவும் முறையற்ற வெளிநாடு செல்லலாலும் பெண்கள் , குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனரெனவும் நீண்டகாலமாக சிவில் பாதுகாப்புக் குழுக்கள் இயங்காமையால் மது பாவனை அதிகரிப்பு,  சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரிப்புக் காணப்படுவதாகவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .