2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மங்களராமயவுக்கு விஜயம் செய்தார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

Thipaan   / 2016 ஒக்டோபர் 11 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மட்டக்களப்பு நகரிலுள்ள பௌத்த விகாரையான ஸ்ரீ மங்களராமய விகாரைக்கு இன்று செவ்வாய்க்கிழமை (11) பிற்பகல் விஜயம் செய்தார்.

யுத்தத்தினால் உயிரிழந்த இலங்கை முப்படை வீரர்களுக்கும் ஆசி வேண்டி விஷேட பிராத்தனை இடம் பெற்றது.

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரோ தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் பௌத்த மதகுருமார் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதியின் இணைப்பாளர் அருண் தம்பிமுத்து உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது இந்த விகாரையின் வளாகத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தாங்கிய புதுமதுர கட்டம், முன்னாள் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டு அங்கு முன்னாள் ஜனாதிபதி வழிபாடுகளில் ஈடுபட்டார்.

கடந்த ஒகஸ்ட் மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டக்களப்புக்கு விஜயம் செய்த போது, மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு விஜயம் செய்யவில்லையெனத் தெரிவித்து, அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவுக்கல், மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரோவினால் உடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X