2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

மட்டு. அஞ்சல் அலுவலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2016 ஜூன் 15 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா

அஞ்சல் சேவை ஊழியர்களுக்கான மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்குமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு பிரதம அஞ்சல் அலுவலகத்திற்கு முன்னாள் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு அஞ்சல் அலுவலக ஊழியர்கள் ஈடுபட்டனர்.

சிறிலங்கா தபால் தொலைத்தொடர்புச் சேவை சங்கம் மற்றும் அகில இலங்கை தமிழ் பேசும் அஞ்சல் சேiயாளர் சங்கம், தபால் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர் சங்கம் என்பன இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

இதன்போது புதிய சம்பளத்திட்டத்திற்கமைய அஞ்சல் ஊழியர்களுக்கு 25 வீதம் மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் 50 வீதம் போனஸ் கொடுப்பனவை வழங்கவேண்டும், பதவி உயர்வுகளுக்கான சம்பளத்தை வழங்க வேண்டும், அனைத்து தரங்களிலுமுள்ள ஊழியர்களுக்கான சம்பள முரண்பாட்டை நீக்க வேண்டும், கிழக்கு மாகாண ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள நிலுவை உடனடியாக வழங்க வேண்டும். அஞ்சல் அலுவலகங்களில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

தபால் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ரதீஸ்வரன் இதன்போது கருத்து தெரிவிக்கையில், 'எங்களது அஞ்சல் சேவை என்பது அத்தியாவசியமான ஒரு சேவையாகும். எங்களுக்கு 1966ம் ஆண்டு தொடக்கம் வழங்கப்பட்டு வந்த மேலதிக கொடுப்பனவு இவ்வாண்டு மே மாதம் முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த மேலதிக கொடுப்பனவை எமது அஞ்சல் திணைக்களம் உடனயடிhக வழங்க வேண்டும்.
அதேபோன்று புதிய சம்பளத்திட்டத்திற்கமைய அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மேலகதிக கொடுப்பனவை வழங்க வேண்டும். அதை வலியுறுத்தியே இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றோம்' என்றார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X