2025 மே 09, வெள்ளிக்கிழமை

மட்டு. அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவராக ஹிஸ்புல்லாஹ்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவராக மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளின் அபிவிருத்திக் குழுத் தலைவராகவும் தான் நியமிக்கப்பட்டுள்ளதாக  இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி நியமனம் தொடர்பாக நியமனக் கடிதத்தின் பிரதிகள்; மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் கிராமிய பொருளாதாரப் பிரதியமைச்சர்  எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, மாவட்ட அபிவிருத்திக ;குழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் மாகாண முதலமைச்சருமான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், தேசிய கொள்கைத் திட்டமிடல் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X