Suganthini Ratnam / 2016 ஜூன் 15 , மு.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் கற்பிக்கும் குழந்தைவேல் கருணைலிங்கம் என்ற ஆசிரியருக்கு ஜனாதிபதி குருதிக் கொடையாளர் விருது கிடைத்துள்ளது.
அதிக குருதியை வழங்கியமை, குருதிக்கொடை வழங்குவதற்கான ஒழுங்குப்படுத்தலை மேற்கொண்டமை ஆகிய விடயங்களைக் கருத்திற்கொண்டு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
குருதிக் கொடையாளர் தினத்தைச் சிறப்பித்து தேசிய குருதி மாற்று பிரயோகச் சேவை தேசிய நிகழ்வு, கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்றது. இதன்போதே மேற்படி ஆசிரியர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
இவர் தனது 27ஆவது வயதிலிருந்து இதுவரை 19 தடவைகள் சுமார் 9975 மில்லிலீற்றர் குருதியை தானமாக வழங்கி வந்துள்ளார். அத்துடன், அதிகமான இரத்ததானம் செய்வதற்கான நடவடிக்கைகளையும்; ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.
2000.08.01 அன்று தனக்கு ஏற்பட்ட விபத்தின்போது, யாரோ ஒருவர் தானம் செய்த இரத்தத்தின் மூலம் தான் காப்பாற்றப்பட்டதாகவும் அன்று முதல் இரத்ததானம் செய்வதற்கு தான் உந்தப்பட்டதாகவும் மேற்படி ஆசிரியர் தெரிவித்தார்.
2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025