Suganthini Ratnam / 2016 ஜூன் 29 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன்
மட்டக்களப்பு கல்வி வலய ஆசிரியர்களின் முறையற்ற வருடாந்த இடமாற்றத்தைக் கண்டித்தும் தங்களின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரியும் ஆசிரியர்கள் சிலர் மட்டக்களப்பு கல்வி வலயத்துக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் இன்று புதன்கிழமை ஈடுபட்டனர்.
இது தொடர்பில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெரிவிக்கையில், 'மட்டக்களப்பு கல்வி வலயத்திலிருந்து 38 ஆசிரியர்களுக்கு ஏனைய கல்வி வலயங்களின் கஷ்டப் பிரதேசங்களுக்கு கடந்த மே மாதம் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
கஷ்டப் பிரதேசங்களில் கற்பித்தல் செயற்பாடுகளை 05 வருடகாலம் பூர்த்தி செய்தபோதிலும், மீண்டும் கஷ்டப் பிரதேசங்களுக்கு எங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. எங்களின் இடமாற்றக் காலம் உள்ளிட்ட விடயங்களை அவதானிக்காமல், இந்த இடமாற்றம்; வழங்கப்பட்டுள்ளது' என்றனர்.
'யுத்த காலத்தில் கஷ்டப் பிரதேசங்களில் கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு மீண்டும் வெளி வலயங்களில் கஷ்டப் பிரதேசங்களில் கடமையாற்றும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை பாரபட்சமான செயற்பாடு ஆகும்.
இந்த இடமாற்றம்; காரணமாக ஆசிரியர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கற்பித்தல் செயற்பாடுகளை உரிய முறையில் மேற்கொள்ளமுடியாத நிலைமை உள்ளது.
திடீரென்று மேற்கொள்ளப்பட்டுள்ள இடமாற்றம் காரணமாக க.பொ.த. சாதாரணதரம், உயர்தரம் மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்' எனவும் அவர்கள் கூறினர்
'எங்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு மற்றும் அரசியல்வாதிகள் முன்வர வேண்டும்' எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


22 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
9 hours ago