2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட்டு. தேசிய கல்விக் கல்லூரியில் புதிய விடுதி

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 14 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நுர்தீன்

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் பெண்கள் விடுதிக்கான அடிக்கல் இன்று வெள்ளிக்கிழமை காலை நாட்டி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதி எஸ்.ராஜேந்திரன் இதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
இந்த வைபவத்தில் மட்டக்களப்பு தேசியக் கல்விக் கல்லூரியின் உப பீடாதிபதிகள் விரிவுரையாளர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள பெண் ஆசிரிய பயிலுனர்களுக்கான இந்த விடுதிக் கட்டடமானது சுமார் 95 ஆசிரிய பெண் மாணவிகள் தங்கக்கூடிய வகையில் அமைக்கப்படவுள்ளதுடன், வகுப்பறைக் கட்டடம் மற்றும் உணவு விடுதி ஆகியவற்றையும் கொண்டதாக அமையப் பெறவுள்ளது.

மட்டக்களப்பு தேசியக் கல்விக் கல்லூரியின் ஆசிரிய பயிலுனர்களின் வதிவிடப்பற்றாக்குறையினை நீக்கும் வகையிலும் அடுத்த வருடத்துக்கான ஆசிரிய பயிலுனர்;களை உள்வாங்கும் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்துடனும் கல்வியமைச்சின் நான்கு கோடி ரூபாய் நிதியொதுக்கீட்டில்; இந்த புதிய விடுதிக்கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு தேசியக் கல்விக்கல்லூரியின் உப பீடாதிபதி எஸ்.ஜெயகுமார் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X