2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மட்டு. நகரில் பதிவு செய்யுமாறு பொலிஸாரால் அறிவிப்பு

Suganthini Ratnam   / 2016 மார்ச் 08 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு நகரப் பிரதேசத்திலுள்ள  வீடுகளில் தங்கியிருப்பவர்கள் பற்றிய விவரங்களை பதிவு செய்யுமாறு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளமையானது தமிழ் மக்களை அச்ச நிலைக்கு கொண்டுசெல்லும் செயற்பாடாக நோக்க வேண்டியுள்ளதாக கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 'பொலிஸ் கட்டளைச் சட்டம் 76ஆம் பிரிவின் கீழ், வீடுகளில் தங்கியிருப்பவர்கள் தொடர்பான  விவரங்கள், தகவல்களுக்காக திரட்டப்படுவதாக பொலிஸ் கூறுகின்றது. வீடுகளில் நிரந்தரமாகத் தங்கியிருப்பவர்களின் விவரங்கள் உறவுமுறையுடன் அதற்கான படிவத்தில் பொலிஸாரால் கோரப்பட்டுள்ளது.

வீட்டு உதவியாளர்கள் உட்பட தற்காலிமாக குடியிருக்கும் ஏனையோர் பற்றிய விவரங்களையும் சமர்ப்பிக்குமாறு பிரதான குடியிருப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நிரந்தர வதிவிடம், உறவுமுறை,  தங்குவதற்கான காரணம் மற்றும் தங்கியிருக்க உத்தேசிக்கப்பட்டுள்ள கால எல்லை போன்ற விவரங்கள் அதில் கேட்கப்பட்டுள்ளன.

இந்த விவரங்களை விரைவாக கிராம சேவை அலுவலகர் ஊடாக கையளிக்குமாறு குடியிருப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமூகமான சூழ்நிலையில் பொலிஸாரின் இந்த  நடவடிக்கை காரணமாக நகர பிரதேச மக்கள் ஒருவித அச்சத்துக்கு உள்ளாகியிருப்பதாகவும் யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் பொலிஸார் குடியிருப்பாளர்களின் விவரங்களை திரட்டுவதற்கான காரணம்; பற்றி தெரியாமல் மக்கள் குழப்பமடைந்த நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X