Niroshini / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,எஸ். பாக்கியநாதன்
'விசர் நாய்க் கடி நோயை இல்லாதொழிப்போம்' எனும் தொனிப்பொருளில் இன்று திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் உலக விலங்கு விசர் நோய் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இலங்கையில் இருந்து 2020ஆம் ஆண்டு விலங்கு விசர் நோயை இல்லாதொழிக்கும் வகையில் விசேட வேலைத்திட்டத்தினை சுகாதார அமைச்சும் சுகாதார திணைக்களமும் இணைந்து ஆரம்பித்துள்ளது.
இதன் ஓர் அங்கமாக,'விலங்கு விசர் நோயை இல்லாது ஒழிக்க ஒன்றுபடுவோம்'எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு ஊர்வலம் இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் எஸ்.சதுர்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி எப்.ஆர்.பி.ரஞ்சன்,பொதுச்சுகாதார பரிசோதகர்கள்,பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்கள்,குடும்பநல உத்தியோகத்தர்கள்,மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2009ஆம் ஆண்டு விலங்கு விசர் கடி நோய் காரணமாக 11பேர் உயிரிழந்ததுடன் 2014ஆம் ஆண்டு இந்த உயிரிழப்பு ஒன்றாக குறைவடைந்ததாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
விலங்கு விசர் கடி நோயை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து முற்றாக ஒழிப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் எஸ்.சதுர்முகம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலத்துக்கு முன்பாக ஆரம்பமான இந்த ஊர்வலம் மட்டக்களப்பு நகர் ஊடாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலகம் வரை சென்றது.

4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago