Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
அனைவருக்கும் பாதுகாப்பான குடி நீரினை வழங்கி ஆரோக்கியமான சமூதாயத்தினை கட்டியெழுப்பும் நோக்கில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் அலுவலகமும் பிளான் ஸ்ரீ லங்கா அமைப்பும் இணைந்து நீர் பாதுகாப்பு திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளன.
அதன் அடிப்படையில் முதலாவது விழிப்புணர்வு நிகழ்ச்சி தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் கே.வினோதனின் தலைமையில் மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நாளை வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.
இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மக்களோடு இணைந்து பணியாற்றுகின்ற பிரதேச செயலாளர், உள்ளூராட்சி உதவிஆணையாளர், யூனிசப், பிளான் ஸ்ரீ லங்கா அமைப்பினர் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் மற்றும் பலர் பங்குபற்றவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
31 minute ago
48 minute ago