2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்புக்கு ஜனாதிபதி விஜயம்

Niroshini   / 2016 டிசெம்பர் 17 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்,வடிவேல் சக்திவேல்

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும்  சுகாதார அமைச்சர்  ஏ.எல்.எம் நஸீர்  ஆகியோரின்  அழைப்பின்  பேரில்  எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  மட்டக்களப்புக்குகு விஜயம் செய்யவுள்ளார்.

இதன் போது  425 மில்லியன் ரூபாய் நிதியில்  புதிதாக  நிர்மாணிக்கப்பட்ட களுவாஞ்சிக்குடி வைத்தியசாலை திறந்து  வைக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

அத்துடன்,  வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி ஆகிய  பகுதிகளுக்கு  குடி நீர் கட்டமைப்பும்  ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த  நீர்  கட்டமைப்புக்கு  ஆசிய  அபிவிருத்தி  வங்கியின் ஊடாக   370  மில்லியன்  ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X