Suganthini Ratnam / 2017 ஜனவரி 09 , மு.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பிலுள்ள பொது அமைப்புகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து மட்டக்களப்பு மாவட்டச் சிவில் சமூக ஒன்றியம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு இணையம் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (08) மாலை நடைபெற்ற பொதுக் கூட்டத்தின்போது இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
மேலும், இந்த ஒன்றியத்துக்கான யாப்பு உள்ளிட்ட செயற்றிட்ட வரைவை சமர்ப்பிப்பதற்காக தற்காலிகமாக இடைக்கால நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டதுடன், இந்த இடைக்கால நிர்வாகம் எதிர்வரும் பெப்ரவரி 18ஆம் திகதிவரை இயங்கும்.
பின்னர், மேலும் பல அமைப்புகளின் பிரதிநிதிகளை இணைத்துக்கொண்டு நிரந்தரமான புதிய நிர்வாகம் ஏற்படுத்தப்படும் என்று அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இடைக்கால நிர்வாகத்துக்கான தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட 21 பேர் உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்டனர்.
யாப்பை உருவாக்குவதற்கான குழுவும் நியமிக்கப்பட்டது.
இதன்போது, ஒன்றியத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
எதிர்வரும் மார்ச் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவைக்கான அறிக்கையை சமர்ப்பித்தல், இம்மாவட்டத்தில் காணி அபகரிப்பைத் தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல், கல்வி மற்றும் பொருளாதார உரிமைகளில் கவனம் செலுத்துதல் உள்ளிட்டவை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக மேற்படி இடைக்கால நிர்வாகத்தின் செயலாளர் எஸ்.ராஜன் தெரிவித்தார்.
7 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago