2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறு தினங்கள் மின்வெட்டு

Niroshini   / 2016 ஜனவரி 24 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இலங்கை மின்சார சபையின் திருத்த வேலைகள் இடம்பெறவிருப்பதால், நாளை திங்கட்கிழமை முதல் தொடர்ந்து ஆறு நாட்களுக்கு, மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மாவட்ட மின் பொறியியலாளர் பணிமனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாளை திங்கட்கிழமை, காலை 09.00- மாலை 5.00 மணி வரை  ஆரையம்பதி, ராஜதுரைக் கிராமம், காங்கேயனோடை, செல்வாநகர் பகுதிகளிலும்

செவ்வாய்க்கிழமை(26), காலை 9.00 - மாலை 5.00 மணி வரை   கறுவாக்கேணி, கிண்ணையடி, கிரான், கோரகள்ளிமடு, சந்திவெளி, மொறக்கொட்டான்சேனை, சித்தாண்டி மற்றும் புலிபாய்ந்தகல் பகுதிகளிலும்

27ஆம் திகதி புதன்கிழமை, காலை 9.00 - 5.00 மணி வரை  மிச்சிநகர்,மீPராக்கேணி, ஜின்னா வீதி, சவுக்கடி, தளவாய், புண்ணக்குடா, தைக்கா வீதி பகுதிகளிலும்

28ஆம் திகதி வியாழக்கிழமை, காலை 9.00 - 5.00 மணி வரை ஓட்டமாவடி, மாவடிச்சேனை, காவத்தாமுனை, மாஞ்சோலை பகுதிகளிலும்

29ஆம் திகதி வெள்ளிக்கிழமை, காலை 9.00 - மாலை 5.00மணி வரை   கல்லடி, நாவற்குடா, மஞ்சந்தொடுவாய் பகுதிகளிலும்

30ஆம் திகதி சனிக்கிழமை, காலை 900 - மாலை 5.00மணி வரை  திருமலை வீதி (தாண்டவன்வெளி-ஊறணி பகுதி), ஞானசூரியம் சதுர்க்கம், இருதயபுரம், ஊறணி ஆகிய பகுதிகளிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X