Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஊத்துச்சேனைக்குளமானது புலம்பெயர்தலுக்கான சர்வதேச நிறுவனத்தினால் 11 மில்லியன் ரூபாய் செலவில் (ஐ.ஓ.எம்.) புனரமைக்கப்பட்டு, மக்களின் பாவனைக்கு செவ்வாய்க்கிழமை (09) கையளிக்கப்பட்டுள்ளது.
இக்குளம் புனரமைக்கப்பட்டமைக்கான ஆவணத்தை மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி பிரதி ஆணையாளர் என்.சிவலிங்கத்திடம் ஐ.ஓ.எம். நிறுவனத்தின் பொறியிலாளர் மொஹமட் பாஹீமால் கையளித்தார்.
ஐ.ஓ.எம். நிறுவனத்தின் இலங்கைக்கான திட்ட முகாமையாளர் முஜாஜிக் அமேலா இக்குளத்துக்குரிய படிகத்தை திரைநீக்கம் செய்துவைத்தார்.
இவ்வாறிருக்க, வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பன்சேனை - நெடுஞ்சேனைக் கிராமத்தில் ஐ.ஓ.எம். நிறுவனத்தினால் புதிதாக அமைக்கப்பட்ட அணைக்கட்டுப்பாலமும் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

1 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
8 hours ago