2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

மட்டக்களப்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பேராளர் மாநாடு

Suganthini Ratnam   / 2016 ஜூன் 26 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 59ஆவது பேராளர் மாநாடு, இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில்  நடைபெறவுள்ளதாக அச்சங்கத்தின் மட்டக்களப்பு கிளைச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜுலை மாதம் எட்டாம் திகதி மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி கேட்போர் கூடத்தில் காலை ஒன்பது மணிக்கு இம்மாநாடு ஆரம்பமாகவுள்ளது. இம்மாநாட்டுக்காக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மாவட்டக் கிளைத் தலைவர்கள், செயலாளர்கள், அங்கத்தவர்கள்  அழைக்கப்பட்டுள்ளார்கள்.

இம்மாநாட்டில் முக்கியமாக நாட்டின் சமகாலப் பிரச்சினைகள் பற்றி ஆராயப்படும். அதேவேளை ஆசிரியர்களினதும் கல்வித்துறையினதும் பொதுமக்களினதும் பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து முன்னெடுக்கவேண்டிய எதிர்காலச் செயற்றிட்டங்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

மாநாட்டை அங்கிகரிப்பதற்கான பிரேரணை, 2016 முதல் 2017 காலப்பகுதிக்கான தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் தெரிவு, காலஞ்சென்ற தலைவர்களையும் உறுப்பினர்களையும் நினைவுகூரல், 2016 முதல் 2017 காலப்பகுதிக்கான முன்மொழிவுகள், ஆலோசனைகள் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடி அங்கிகரித்தல் போன்ற விடயங்களுடன் இன்னும் பல அம்சங்கள் நிகழ்ச்சிநிரலில் சேர்க்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

மேலும், இம்மாநாட்டில் கலந்துகொள்ளும்  உறுப்பினர்களுக்கு தாபனக்கோவை ஓஓஏ 2-1 இன் படி ஒரு நாள் கடமை விடுமுறையும் இருவழிப் பயணத்துக்கான ரயில் பயணச் சீட்டும் பெற உரிமை உண்டு. இந்த உரிமைகளை மறுப்பதற்கு அதிபர்களுக்கோ, அதிகாரிகளுக்கோ முடியாது. கடமை விடுமுறையும் ரயில் பயணச் சீட்டும் பெறுவதற்கு அதிபர் ஊடாக வலயக் கல்விப் பணிப்பாளருக்கு முன்கூட்டி விண்ணப்பிக்க வேண்டும் எனவும்; அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X