2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் கையெழுத்து வேட்டை

Niroshini   / 2015 செப்டெம்பர் 09 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ்.பாக்கியநாதன்

சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப்பூங்காவுக்கு முன்னாள் இன்று புதன்கிழமை மாலை கையெழுத்து வேட்டை இடம்பெற்றது.

இதனை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி பொன்னைய்யா ஜோசப் ஆரம்பித்து வைத்தார்.

இதில் மட்டக்களப்பிலுள்ள சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் பலரும் கையொப்பமிட்டனர்.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு இலட்சம் பேரின் கையொப்பங்களை திரட்டவுள்ளதாக சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக் குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் பொறியியலாளர் அலன் சத்தியநாதன் தெரிவித்தார்.

நாளை வியாழக்கிழமை நகரின் மாநகர சந்தை சதுக்கம், புகையிரத நிலையம், பஸ்நிலையம் உடபட பல இடங்களில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X