2025 மே 12, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் கடும் வரட்சி: நீர் வற்றிய நிலையில் குளங்கள்

Niroshini   / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக நடுத்தர நீர்ப்பாசன குளங்கள் பெருமளவில் வற்றிவிட்டதாக மாகாண நீர்ப்பாசன திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பிரதி பணிப்பாளர் எம்.வடிவேல் தெரிவித்தார்.

இம்மாவட்டத்தில் 14 நடுத்தர நீர்ப்பாசன குளங்கள் உள்ளன.அவற்றுள் செங்கலடி பிரதேச செயலகப்பிரிவில் 5 குளங்களும் ஏனைய இடங்களிலும் 9 குளங்களும் உள்ளன.இவற்றில் மதுரங்கேணி பெரிய குளம், மகிழடித்தீவு குளம்,பழுகாமம் குளம், சேவகப்பற்று குளம், போரதீவு குளம் மற்றும் மகிழூர் குளம் ஆகிய குளங்கள் முற்றாக வற்றிவிட்டன.

கடுக்காமுளை குளம் தற்போது 5 அடி தண்ணீரை  மாத்திரமே கொண்டுள்ளது.இதேவேளை, புழுகுணாண, அடைச்சகல் போன்ற குளங்களும் பெருமளவில் வற்றிவிட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த குளப்பிரதேசங்கள் வரட்சி காரணமாக பெரிதும் வரண்டு காணப்படுவதுடன் வயல் நிலங்களும் வரண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X