Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜனவரி 20 , மு.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில், கே.எல்.ரி.யுதாஜித்,எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஏ.எச்.ஏ. ஹுஸைன், ஜுனைட்.எம்.பஹ்த்
கடவுச்சீட்டு வழங்கும் கிளைக் காரியாலயமொன்றை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்படுத்தித் தருமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் இன்று புதன்கிழமை ஊடகங்களுக்கு தெரிவித்த அவர், 'கடந்த ஆட்சியில் மக்களின் நலன் கருதாமல், அரசியல் இலாபங்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகளில் கடந்த ஜனாதிபதி உட்பட அனைவரும் செயற்பட்டிருந்தனர்.
இதனை மக்கள் எதிர்த்து நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்க முயற்சித்து அந்த ஆட்சியைக் கொண்டுவந்துள்ளனர். நல்லாட்சி ஊhடாக தங்களின் அன்றாட வாழ்க்கை சுபீட்சமடைய வேண்டுமென்பதே அம்மக்களின் எதிர்பார்ப்பாகும். மக்களின் எதிர்பார்ப்புகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றும் வகையில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலுள்ள மக்கள் கடவுச்சீட்டுகளை பெறுவதற்காக கிளைக் காரியாலயத்தை மட்டக்களப்பில் ஏற்படுத்தித் தரவேண்டும்.
தற்போது கொழும்பு, கண்டி, வவுனியா ஆகிய இடங்களில் கடவுச்சீட்டுகளை வழங்குகின்ற கிளைக் காரியாலயங்கள் உள்ளன. இதனுடன் சேர்த்து இன்னுமொரு கிளைக் காரியாலயத்தை கிழக்கு மாகாண மக்களுக்காக ஏற்படுத்தித்; தரவேண்டுமென்று வேண்டுகோள் விடுத்து ஜனாதிபதி, பிரதமர், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஆகியோருக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago