2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் துப்பாக்கி, ரவைகள் மீட்பு

George   / 2016 ஒக்டோபர் 08 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கணங்குளமடு காட்டுப் பகுதியில், நிலத்தில் புதைத்திருந்த நிலையில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

டி-56 ரக துப்பாக்கிகள் இரண்டும், அவற்றுக்கான மகஸின்கள் இரண்டும் தலா 30 ரவைகளுடன் மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து குறித்த இடத்துக்குச் இன்று சனிக்கிழமை காலையில் சென்ற பொலிஸார், இந்தத் துப்பாக்கிகளையும் ரவைகள் நிரம்பிய மகஸின்களையும் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X