Niroshini / 2015 நவம்பர் 30 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,ஏ.எச்.ஏ. ஹுஸைன்
2015 இளைஞர் நாடாளுமன்றத்துக்கு இணையாக 'துருணு சிரம சக்தி' தேசிய கிராம அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இளைஞர் கழக பிரதேச சம்மேளனம், மாவட்ட சம்மேளனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் மட்டக்களப்பு மாவட்ட பிரதான நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கூழாவடியில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது.
மட்டக்களப்பு இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் எட்வேர்ட் ஜெயராசா பயஸ்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாகவும் சிறப்பு அதிதியாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் சுகத் ஹேமாவிதாரண ,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா,மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் கே.கலாராணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது 'துருணு சிரம சக்தி' தேசிய கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள அறநெறிப் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
இதேவேளை,இன்று திங்கட்கிழமை ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில் தலா ஒரு இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு வேலைத் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இதன்படி ஏறாவூர் பொதுச் சந்தை ஒழுங்கையும் சுரட்டையன்குடா குறுக்கு வீதியும் புனரமைக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி நிஷாந்தினி அருள்மொழி, ஏறாவூர் நகர உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஷா, ஏறாவூர் நகர சபைச் செயலாளர் எச்.எம்.எம். ஹமீம், பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரி ஏ.எம். ஹனீபா, மாவட்ட இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம். றிகாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





4 hours ago
22 Dec 2025
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
22 Dec 2025
22 Dec 2025