Gavitha / 2016 ஜூன் 15 , மு.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு பிராந்திய மின் பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனை, ஏறாவூர், செங்கலடி, வந்தாறுமூலை, சித்தாண்டி, முறக்கொட்டான்சேனை, கிரான், பாசிக்குடா, வாழைச்சேனை, ஓட்டமாவடி போன்ற பிரதேசங்களில், நேற்று செவ்வாய்க்கிழமை (14) எவ்வித முன்னறிவித்தலுமின்றி, அடிக்கடி மின்சாரம் தடைப்பட்டதாகவும் இதனால் குறித்த பகுதியிலுள்ள மின் பாவனையாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்ததாகவும் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேற்குறிப்பிட்ட பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை சுமார் 25 தடவைகளுக்கு மேல் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
இதனால் அலுவலகங்களில், குறிப்பாக கணினிகளின் ஊடாக கடமையாற்றுவோர் அதிக சிரமத்துக்கு முகங்கொடுத்ததுடன் வைத்தியசாலை போன்ற அத்தியாவசிய சேவை நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
'மின்சார விநியோக மார்க்கத்தில் மாற்றம் ஏற்படுத்தும் வேலைகள் இடம்பெறுவதால், இந்த மின் தடை ஏற்பட்டது' என்று இலங்கை மின்சார சபையின் ஏறாவூர் அலுவலக உத்தியோகத்தர் குறிப்பிட்டார்.
2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025