2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில்'நாம் மாற்றுவோம்' நடவடிக்கை முன்னெடுப்பு

Niroshini   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

அனைவரும் சமத்துவமாகவும் சுதந்திரமாகவும் கௌரவத்தோடும் இந்த நாட்டில் வாழ்வதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்குவதற்காக 'நாம் மாற்றுவோம்'  நடவடிக்கையை மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கிலங்கை சமூக அபிவிருத்தி மன்ற தன்னார்வ நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஹ்மூதுலெப்பை மொஹமட் புஹாரி மொஹமட் தெரிவித்தார்.

'நாம் மாற்றுவோம்' செயல்வாத நடவடிக்கையின் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் வியாழக்கிழமை இடம்பெற்றது.

அவர் மேலும் கூறுகையில்,

சமகாலத்தில் மக்கள் தாங்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளைப் பேசிக் கொள்வதற்கான ஒரு தளத்தை உருவாக்கி, எதிர்காலத்தில் சுதந்திரமாகவும் கௌரவத்தோடும், இந்த நாட்டில் வாழ்வதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். எந்தத் துறைகளில் எவ்வாறான மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற கருத்துக்களை மக்களிடமிருந்து பெற்றுக் கொள்வது அவசியம்.

அதனைப் பெற்றுக் கொண்டு தேசிய ரீதியில் பயன்படக் கூடிய பொருத்தமான கொள்கையை வகுத்தெடுத்து  அதனை அரசாங்கத்துக்கும் ஆர்வக் குழுக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் வழங்குவதனூடாக மாற்றங்களை நோக்கிச் சிந்திக்க வேண்டும்.இதற்கான தொடர்ச்சியான முன்னெடுப்பு நாடு முழுவதிலும் இன, மத, மொழி பிரதேச வேறுபாடுகளின்றி முன்கொண்டு செல்லப்படும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X