2025 மே 08, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் 1,742.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு

Niroshini   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்   

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் இன்று வியாழக்கிழமை (10) காலை 8.30 மணி வரை 1,742.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட கடமை நேர அதிகாரி சுப்பிரமணியம் ரமேஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாட்டத்தில் பெய்துவரும் வடகீழ் பருவ பெயர்ச்சி மழை காரணமாக மக்கள் குடியிருப்புக்களிலும் வீதிகளிலும் மழை நீர் தேங்கி நிற்பதனால் மக்கள் போக்குவரத்துச் செய்வதில் பலத்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, பல கிராமங்களின் உள்வீதிகளும் சேதமடைந்துள்ளதோடு, விவசாயிகளும் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X