Suganthini Ratnam / 2016 மே 04 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
இந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 450 ஏக்கரில் மரமுந்திரிகை செய்கை பண்ணப்பட்டதாகவும் எனினும், அதிக வெப்பம் காரணமாக இதன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் ரி.டி.நிதர்சன் தெரிவித்தார்.
தற்போதைய வெப்பமான காலநிலை காரணமாக மரமுந்திரிகை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக செய்கையாளர்கள் தெரிவித்தனர்.
மரமுந்திரிகைச் செய்கை மூலம் கடந்த வருடங்களில் ஒரு இலட்சம் ரூபாய் வரை இலாபம் பெற்ற செய்கையாளர்கள் ஒவ்வொருவரும், தற்போதைய வெப்பமான காலநிலை காரணமாக 50 ஆயிரம் ரூபாய் வரையே பெற முடியும்.
தற்போது மரமுந்திரிகை அறுவடை ஆரம்பமாகியுள்ளதாகவும் எனினும், இதன் உற்பத்தி பெரிதும் குறைவடைந்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
ஏறாவூர், களுவாஞ்சிக்குடி, களுதாவளை, புதுக்குடியிருப்பு, தாழங்குடா, வெல்லாவெளி, பெரியபோரதீவு உள்ளிட்ட பகுதிகளில் மரமுந்திரிகைச் செய்கை பண்ணப்படுகின்றது.

3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago