Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்,எஸ். பாக்கியநாதன்
மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை விபத்து இடம்பெற்றது.
குறித்த ரயில் நிலையத்திலிருந்து தினமும் 6.15 மணிக்கு புறப்படும் கொழும்பு, கோட்டை நோக்கிப் புறப்படும் உதயதேவி ரயிலே விபத்துக்குள்ளானது. குறித்த ரயில் புறப்படுவதற்கு தயாராகிக்கொண்டிருந்த வேளையில், ரயில் இஞ்சின் மோதியதாக மட்டக்களப்பு ரயில் நிலைய பிரதம நிலைய அதிபர் எம்.பி.கபூர் தெரிவித்தார்.
இதன் காரணமாக குறித்த இஞ்சின்; தண்டவாளத்திலிருந்து தடம்புரண்டதுடன், ரயில் பெட்டி ஒன்றும் ரயில் கடவையும் சேதமடைந்துள்ளன.
இதன்போது, பயணிகள் எவருக்கும் எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை எனவும் அவர் கூறினார்.
இருப்பினும், இந்த விபத்தை அடுத்து, காலை 6.15 மணிக்குப் புறப்படும் உதயதேவி ரயிலானது ஒரு பெட்டியைக் குறைத்துக்கொண்டு தனது பயணத்தை மேற்கொண்டது.
மேலும், முற்பகல் 10.25 மணிக்கு பொலன்னறுவை நோக்கிச் செல்லும் ரயில் சேவை இரத்துச் செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago