2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் 30 விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளில் காளான் செய்கை

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 05 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 30 விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளில் காளான் செய்கை பண்ணப்பட்டு வருவதாக ஆரையம்பதிப் பிரதேசத்துக்கான விவசாயப் போதனாசிரியை குந்தவை ரவிசங்கர் தெரிவித்தார்.

ஆரையம்பதியில் செய்கை பண்ணப்பட்ட காளான் செய்கையின் அறுவடை நேற்று (05) மேற்கொள்ளப்பட்டது.

இங்கு வீட்டுத் தோட்டத்தின் ஓர் அங்கமாகக் காளான் செய்கை காணப்படுவதாகவும் காளான் செய்கையில் பெண்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும்  அவர் கூறினார்.

காளான் செய்கையாளர்களுக்கு கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தால் 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான விவசாய உள்ளீடுகள் வழங்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X