Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
முத்திரை இடப்படாத நிறுத்தல் அளத்தல் கருவிகளைப் பயன்படுத்தியமை மற்றும் நிறைகுறைந்த பாண் உள்ளிட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாகக் கூறப்படும் 11 வர்த்தகர்;களைக் கைதுசெய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி ஏ.எல்.நௌசாத் தெரிவித்தார்.
அத்துடன், முத்திரை இடப்படாத நிறுத்தல் அளத்தல் கருவிகளையும் குறித்த வர்த்தக நிலையங்களிலிருந்து கைப்பற்றியதாகவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின்; வாழைச்சேனை, ஓட்டமாவடி, பாலமுனை, காத்தான்குடி, காங்கேயனோடை ஆகிய பகுதிகளிலுள்ள 50 வர்;த்தக நிலையங்களில் புதன்கிழமை (19) சோதனை மேற்கொள்ளப்பட்டன.
வெதுப்பகங்கள், மீன் விற்பனை நிலையங்கள், சில்லறைக் கடைகள், கருவாட்டுக் கடைகள், பழக்கடைகள் உள்ளிட்டவற்றில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டன.
4 minute ago
19 minute ago
20 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
19 minute ago
20 minute ago
21 minute ago