2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

மடிப்படியிலிருந்து விழுந்து பரிதாபப் பலி

Editorial   / 2019 ஜூலை 28 , பி.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி 6ம் குறிச்சியில் பெண்ணொருவர் நேற்றுமுன்தினம் மாலை மடிப்படியிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று காத்தான்குடி ஆறாம் குறிச்சி தெற்கு எல்லை வீதியில் இடம்பெற்றுள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தாயான கே.எம்.பஸ்மியா ,தனது   சகோதரியின் வீட்டுக்கு சென்று அங்கு வீட்டு மாடியில் பேசிக் கொண்டிருந்து விட்டு, மஹ்ரிப் தொழுகைக்காக மாடியிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்த போது மாடிப்படிகளில் சறுக்கி விழுந்த இவரை,அவசர சிகிச்சை அம்பூலன்ஸ் வாகனத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் மாடிப்படிகளில் வீழ்ந்ததில் தலைப்பகுதி பலமாக அடிப்பட்டதினால் உயிரிழந்திருக்கலாமென  வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X