2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

மட்டக்களப்பிலும் உண்ணா விரதப் போராட்டம் ஆரம்பம்

Princiya Dixci   / 2021 மார்ச் 03 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன், வா.கிருஸ்ணா

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோரி, இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் உட்பட 4 கோரிக்கைகளை முன்வைத்து, லண்டனில் பெண்ணொருவர் தொடங்கியுள்ள உண்ணா விரதத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் மட்டக்களப்பிலும் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. 
 
சுழற்சி முறையிலான இந்த உண்ணா விரதப்  போராட்டம், மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் கோவிலுக்கு முன்பாக இன்று (03) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் முதல் பொதலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதில் மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறீநேசன், பி.அரியநேந்திரன் உட்பட முக்கியஸ்தர்களும் காணாமலாக்கப்பட்டோரின் குடும்ப உறவினரகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோரி, இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் உட்பட 4 கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியாவில் வசிக்கும் அம்பிகை செல்வகுமார் எனும் பெண், சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை லண்டனில் கடந்த 27ஆம் திகதி ஆரம்பித்தார்.

அவருக்கு வலுச் சேர்க்கும் வகையில் கடந்த 28ஆம் திகதி முதல் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்  நல்லூரில் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X