2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் 1,037 பேர் த​னிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

Editorial   / 2020 மார்ச் 25 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில், 1,037 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருவதாக, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தொற்று தடுக்கு செயலணியின் விசேட கூட்டம், இன்று (25) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில், மாவட்ட அரசாங்க அதிபரும் தொற்று தடுக்கு செயலணியின் தலைவருமான திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்றது.

இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் உட்பட பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும்

ஊரடங்கு சட்டம், நாளை காலை தளர்த்தப்படவுள்ள நிலையில், இதன்போது மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் வகையில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.

இதன்போது, ஊரடங்கு சட்டம் நீக்கப்படும்போது மக்கள் ஒன்றுகூடுவதைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கையை முன்னெடுத்தல், அனைத்து மக்களும்

பொருள்களைப் பெற்றுக்கொள்ளும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுத்தல், வர்த்தக நிலையங்களுக்கு வரும் மக்கள் குவிந்து நின்று பொருள்களைக் கொள்வனவு செய்யாமல் இடைவெளியை பேணுவதற்குத்

தேவையான நடவடிக்கைகளை பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் ஊடாக முன்னெடுப்பது குறித்து இங்கு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

அத்துடன், ஊரடங்கு தளர்த்தப்படும்போது அத்தியாவசியப் பொருள் விற்பனை செய்யும் நிலையங்கள், மருந்து பொருள்கள் விற்பனை நிலையங்களை மட்டுமே

திறப்பது எனவும் ஆடை விற்பனை நிலையங்கள், நகை விற்பனை நிலையங்கள்  உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருள்கள் விற்பனை நிலையங்களை மூடுவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார துறையினர் பொருள் கொள்வனவுகளை

மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டு அதற்கான நேரங்களும் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X