2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

மட்டக்களப்பில் 22 குளங்கள் புனரமைக்கப்படவுள்ளன

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 02 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஜனாதிபதி கோட்டாபய ராஐபக்ஷவின் எண்ணக்கருவில் உதயமான 5,000 குளங்களைப் புனரமைக்கும் செயற்றிட்டத்தை நாடுபூராகவும் நடைமுறைப்படுத்துவதற்கான விசேட கூட்டம், பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி, உள்நாட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதாரப் பயிர் ஊக்கிவிப்பு இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (01) பிற்பகல் நடைபெற்றது. 

நாடு முழுவதும் ஐந்து வருடங்களுக்கு மேலாக அபிவிருத்தி செய்யப்படாத தூர்ந்துபோன குளங்கள், அணைக்கட்டுகள் மற்றும் வாய்கால்கள் போன்றவற்றை புனரமைச் செய்யும் திட்டம் தொடர்பாக இங்கு விளக்கமளிக்கப்பட்டது.

இதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் கமநல சேவைகள் திணைக்களத்துக்குரிய 8 குளங்களும் 2 அணைக்கட்டுகளும் , மாகாண நீர்ப்பாசன திணைக்களத்துக்குரிய 7 குளங்களும் , மத்திய நீர்ப்பாசன திணைக்களத்துக்குரிய 7 குளங்களுமாக மொத்தம் 22 குளங்களும் 2 அணைக்கட்டுகளும் புனருத்தாரணம் செய்யப்படவுள்ளன. 

இவ் வேலைத்திட்டத்துக்கான நிதி அரசால் வழங்கப்பட்டுள்ளதுடன் புனரமைப்பு பணிகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X