Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 09 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்களுக்கு இதுவரை 40,909 நிவாரண உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், மேலும் 17 ஆயிரத்து 868 உலர் உணவு பொதிகள் வழங்கப்படவுள்ளதாக, மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா அபாயம் ஏற்ப்பட்ட காலம் முதல் இன்று (நேற்று 08) வரை 14 பிரதேச செயலகங்களில் உள்ள கூலித்தொழிலாளர்களுக்கு தொழில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் நிவாரணப் பொருள்களை மாவட்டச் செயலகத்தின் ஊடாக பிரதேச செயலங்களின் மூலமாக மக்களுக்கு வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனடிப்படையில் மாவட்டத்தில் இயங்கிவரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனிப்பட்ட நபர்கள் அதனை தவிரவும் தாங்களாக முன்வந்தும் உதவும் செயல் திட்டங்களும் பிரதேச செயலாளர்கள் மூலமாகவும் வழங்கப்பட்டது.
குறிப்பாக தொண்டு நிறுவனங்களுடாக 13,795 உணவுப்பொதிகளும் தனிப்பட்ட நபர்கள் மூலமாக கிடைத்த நிதியூடாக 870 உணவுப்பொதிகளும் மேலும் தனிநபர்களாக பொதிசெய்த 8 ஆயிரத்து 376 உணவுப் பொருள்கள் பிரதேச செயலகங்களுடாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனைத்தவிரவும் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படவுள்ள நிவாரணப்பணிகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன எனவும் மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.
இதேவேளை, மாவட்டத்தில் 17 ஆயிரத்து 868 உலர் உணவுப் பொதிகள் கிடைக்கவுள்ளதாகவும் அவை கிடைக்கப்பெற்றதும் அவற்றையும் பங்கிடுசெய்வதற்கு பிரதேச செயலாளர்கள் தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago