Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
ரீ.எல்.ஜவ்பர்கான் / 2019 டிசெம்பர் 23 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமா,க இம்முறை செய்கை பண்ணப்பட்ட பெரும்போக நெற்செய்கையில், சுமார் 50 ஆயிரம் ஏக்கர், நீரில் மூழ்கியுள்ளதாக, மாவட்டக் கமநல சேவைகள் அபிவிருத்தித் திணைக்களப் பிரதி ஆணையாளர் எம்.ஜெகந்நாதன் தெரிவித்தார்.
வெள்ளம் காரணமாக, 10,400 ஏக்கர் பெரும்போக வேளாண்மை முற்றாக அழிவடைந்துள்ளதாக, விவசாயிகளிடமிருந்து விவரங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இம்முறை 1 இலட்சத்து 75 ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை பண்ணப்பட்டுள்ளது. இவற்றுள் பெரும்பாலான வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
வவுணதீவு, கொக்கட்டிச்சோலை, வெல்லாவெளி, கிரான், செங்கலடி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலேயே அதிகமான நெற்செய்கை நீரில் மூழ்கியுள்ளதாகவும், கமநல அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago