Princiya Dixci / 2022 ஜூலை 21 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம்
ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக கடைமையை பொறுப்பேற்றதையொட்டி, ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் மற்றும் முகாமையாளர் தலைமையிலான குழுவினர், நேற்று (21) பட்டாசு கொழுத்தியும் குளிர்பினம் வழங்கியும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐ.தே.கவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் வீ.கே.லிங்கராசா மற்றும் கட்சியின் மாவட்ட முகாமையாளர் எல்.பிரதாப் தலைமையிலான குழுவினரே இவ்வாறு மட்டக்களப்பு நகரில் பட்டாசு கொழுத்தி, மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.
ஆரையம்பதி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.மகேந்திரலிங்கம், மட்டக்களப்பு மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களான ரீ.சிவலிங்கம் மற்றும் பீ.சுரேஸ்குமார் ஆகியோர்கள் இதன்போது உடனிருந்தனர்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மகளிர் அமைப்பாளரும், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான திருமதி சசிகலா விஜயதேவா, தனது இல்லத்தின் வாயிலில் ஜனாதிபதிக்கான வாழ்த்துப் பதாதை தொங்கவிட்டு, வீதியில் பயணிக்கும் பொதுமக்களுக்கு குளிர்பானம் வழங்கினார்.

1 hours ago
1 hours ago
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
5 hours ago