2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் கொரோனா தொற்று அதிகரிப்பு

Freelancer   / 2021 ஜூன் 16 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வி.ரி.சகாதேவராஜா

கிழக்கு மாகாணத்தில் இன்று (16) வரை கொரோனாவுக்கு 230 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் 204 பேர் மூன்றாவது அலையில் மரணித்தவர்களாவர். திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை 118பேர் மரணித்துள்ளனர்.

கிழக்கில் இதுவரை  மரணித்த 23 பேரில்  திருகோணமலை மாவட்டத்தில் அதிகூடிய 118 பேரும், அம்பாறைப் பிராந்தியத்தில் 23 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 59 பேரும், கல்முனைப் பிராந்தியத்தில்  30 பேரும்  மரணித்துள்ளனர்.

இதே வேளை கடந்த 6 நாட்களாக கிழக்கில் 60,139 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மட்டு மாவட்டத்தில் 22,279 பேருக்கும், அம்பாறை பிராந்தியத்தில் 21,504 பேருக்கும், திருமலை மாவட்டத்தில் 16,063 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளன.

கல்முனைப் பிராந்தியத்திற்கு இதுவரை தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பிக்கப்படவில்லை.

கிழக்கு மாகாணத்தில் இதுவரை 11,744 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்று நான்காயிரத்தை கடந்து,  இன்று வரை 4038 ஆக அதிகரித்துள்ளது .

மட்டக்களப்பு மாவட்டத்தில் 4038 பேரும், திருகோணமலையில் 3844 பேரும், அம்பாறைப் பிராந்தியத்தில் 1791 பேரும், கல்முனைப் பிராந்தியத்தில்  2071 பேரும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் வெளியிட்ட புள்ளி விபரங்களிலிருந்து இதனை அறிய முடிகிறது.

M


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .