2025 மே 08, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் டெங்குத் தொற்று தீவிரம்

Editorial   / 2020 ஜனவரி 03 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில், 2019ஆம் ஆண்டு ஐனவரி 1ஆம் திகதியில் இருந்து இதுவரை, 2,218 பேர் டெங்குத் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுள்ளனர் என்று, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டெங்குக் கட்டுப்பாடு பிரிவுக்குப் பொறுப்பான வைத்திய கலாநிதி வே.குணராஜசேகரம் தெரிவித்தார.

மட்டக்களப்பு மாவட்டத்தில், டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில், டிசெம்பர் 20ஆம் திகதி டிசெம்பர் 27 ஆந் திகதிவரையும் 182 பேர் டெங்குநோய் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர் என்று, அவர் மேலும் தெரிவித்தார்.  

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டு ஐனவரி 1ஆம் திகதியில் இருந்து இதுவரை 2,218 பேர் டெங்குத் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர்.

இவ்வாரம், மட்டக்களப்பு பிரிவில் இதுவரை 36 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோன்று ஆரையம்பதியில் 38 பேரும் களுவாஞ்சிகுடியில் 28 பேரும், செங்கலடியில் 17 பேரும், ஏறாவூர் 16 பேரும் வாழைச்சேனையில் 13 பேரும்,  காத்தான்குடியில் 11 பேரும்,  பட்டிப்பளையில் 06 பேரும், ஒட்டமாவடியில் 06 பேரும், வவுனதீவில் 03 பேரும், கோரளைப்பற்று மத்தியில் 03 பேரும், வாகரையில் 02 பேரும், கிரானில் 02 பேரும், வெல்லாவெளியில் ஒருவரும் டெங்குத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்தமாக கடந்தவாரம் 182 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளோர் பதிவாகியுள்ளனர்.

மட்டக்களப்பு மக்கள் சற்று விழிப்புடன் செயற்பட்டு வீடுகளில் தேங்கி கிடக்கின்ற குப்பைகள், நீர்தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருவதற்கு இடம்கொடுக்காத வகையில் துப்பரவாக வைத்து கொள்ளுமாறு, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிபனையின் டெங்குக் கட்டுப்பாடு பிரிவுக்குப் பொறுப்பான வைத்திய கலாநிதி வே.குணராஜசேகரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X