2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் தீவிரமடையும் டெங்கு

Freelancer   / 2023 மே 01 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி

“மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துச் செல்கின்றது. கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் தற்போது வரையில் 850 நோயாளிகள் இனம் காணப்பட்டு, சிகிச்சை பெற்றுள்ளனர். அதில் செங்கலடியைச் சேர்ந்த 22 வயது இளைஞன் மரணமடைந்துள்ளார்” என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார். 

மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட் டெங்கு பரிசோதனையில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு, மாவட்டத்தின் டெங்கு தீவிரத்தில் முதன்மையான இடத்தை பெறுகின்றது. இப்பிரவில் 207 பேர் டெங்கு நோயாளிகளாக இனம் காணப்பட்டுள்ளனர். அதிலும் கொக்குவில் பிரதேசத்தில் ஒரே வீட்டில் நான்கு நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர்.

வெட்டுக்காடு மற்றும் இருதயபுரம் ஆகிய கிராமங்களிலும், மட்டக்களப்பு நகர வைத்திய சுகாதார பிரிவில் 35 சதவீதமானவர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். எனவே, மண்முனை வடக்கு பிரதேச செயலப் பிரிவில் விசேட அதிரடி டெங்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொக்குவில் பிரதேசத்தில் பொதுமக்களின் வீடுகள், கிணறுகள் மற்றும் சுற்றுப்புற சூழல்கள் என்பன பரிசோதிக்கப்பட்டு, உரிய சுகாதார முறையில் சுத்தமாக வைத்திருக்க தவறியவர்கள் மீது சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன.

இவ்விஷேட பரிசோதனையின்போது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன் உட்பட பொது சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதனைகள் மற்றும் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர். (N)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .