2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் நீர் விநியோகம் மட்டுபடுத்தப்படும்

Editorial   / 2017 ஜூலை 15 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல் 

தேசியநீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் வவுணதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திலுள்ள நிலக்கீழ் நீர் சேமிப்புத் தொட்டியில், எதிர்வரும் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பராமரிப்புவேலைகள் இடம்பெறவுள்ளதனால், அன்றையதினம் நண்பகல் 12 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை, நீர் விநியோகம், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்படும் என, தேசியநீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் அலுவலகத்தின் கீழ் உள்ள செங்கலடி, மட்டக்களப்பு, ஏறாவூர், இருதயபுரம், காத்தான்குடி, கல்லடி, ஆரையம்பதி, களுவாஞ்சிகுடி, கல்லாறு, வவுணதீவு மற்றும் மண்டூர் ஆகியநீ ர் வழங்கல் நிலையங்களினுடான நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்படும் என அதன் பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் டி.ஏ. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

எனவே, பொதுமக்கள் அன்றையதினம் நீரைச் சேமித்து வைத்து பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X