Freelancer / 2022 ஓகஸ்ட் 26 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு கடந்த இரண்டு மாதங்களாக காணப்பட்டுவந்த நிலையில், நேற்று (24) முதல் ஆரையம்பதி பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது.
பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட ஒரு குடும்ப அட்டைக்கு 1000 ரூபாவிற்கு, மீனவர் சங்கத்தின் சிபாரிசுடன் வரும் மீனவர்களுக்கு 20 லீற்றர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த எரிபொருள் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள 13200 லீற்றர் மண்ணெண்ணெய்யினை இரண்டாவது நாளாக நேற்று மக்களுக்காக விநியோகிக்கப்பட்டதுடன், பூநொச்சிமுனை, பாலமுனை மற்றும் கிரான்குளம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. (a)
29 minute ago
43 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
43 minute ago
4 hours ago
4 hours ago