Freelancer / 2023 மே 10 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
புகையிரத நிலைய அதிபர்களின் பணி பகிஸ்கரிப்பு காரணமாக மட்டக்களப்பிற்கும் கொழும்பிற்குமிடையிலான அனைத்து புகையிரத சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு புகையிரத நிலைய பிரதம அதிபர் தெரிவித்தார்.
தினமும் கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு மூன்று புகையிரத சேவைகளும் கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு மூன்று சேவைகளும்,
மட்டக்களப்பிலிருந்து மாகோவிற்கு இரு சேவைகளும் இடம் பெற்று வந்தன. தற்போதைய வேலை நிறுத்தத்தினால் அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு புகையிரத நிலையம் தற்போது பயணிகளின் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .