2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பு – மஹரகம பஸ் சேவை மீண்டும் ஆரம்பம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 ஓகஸ்ட் 09 , பி.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மஹரகமையிலுள்ள புற்றுநோயாளர் வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளர்கள் மற்றும் உறவினர்களின் நன்மை கருதி, மட்டக்களப்பு - மஹரம பஸ் சேவை, எதிர்வரும் 15ஆம் திகதி தொடக்கம் மீண்டும் இடம்பெறவுள்ளதாக, மட்டக்களப்பு போக்குவரத்துச் சாலை முகாமையாளர் மாசிலாமணி கிருஷ்ணராஜா தெரிவித்தார்.

கடந்த ஜுலை மாதம் 19ஆம் திகதி, இவ்வாறானதொரு சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதன்மூலம் கிழக்கு மாகாணத்திலிருந்து குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலிருந்து மஹரகமை புற்றுநோயாளர் வைத்தியசாலைக்குச் செல்வோர் அதிக நன்மையடைந்தனர்.

எனினும், கதுறுவெலயிலுள்ள சில தனியார் பஸ் உரிமையாளர்கள், இந்த பஸ் சேவைக்கு பல இடையூறுகளை ஏற்படுத்தியதால் பயணிகளின் பாதுகாப்புக் கருதி, அந்தச் சேவை ஆரம்பித்த 4 நாட்களின் பின்னர் இடைநிறுத்தப்பட்டது.

இந்நி​லையில், போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றின் அனுமதியோடு, பாதுகாப்பு உத்தரவாதம் தரப்பட்டதின் பின்னர் இந்த பஸ் சேவையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக மட்டக்களப்பு போக்குவரத்துச் சாலை முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .