வா.கிருஸ்ணா / 2018 ஜனவரி 01 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் தேர்தல் முறைப்பாடுகள், 7 பதிவுசெய்யப்பட்டுள்ளனவென, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான எம்.உதயகுமார் தெரிவித்தார்.
தேர்தல் முறைப்பாடுகளைப் பதிவுசெய்யும் வகையில், மாவட்டச் செயலகத்தில் தேர்தல் முறைப்பாட்டுப் பிரிவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, வாழைச்சேனையில் இருந்து 2 முரண்பாடுகளும், காத்தான்குடியில் இருந்து ஒரு முறைப்பாடும், ஏறாவூர் நகரசபைப் பகுதியில் இருந்து மூன்று முறைப்பாடுகளும் களுவாஞ்சிகுடிப் பகுதியில் இருந்து ஒரு முறைப்பாடும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
ஏழு முறைப்பாடுகளில் ஒன்றுக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய ஆறு முறைப்பாடுகளுக்குமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
“தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளின்போதே அதிகளவான முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
“ஆறு முறைப்பாடுகள் பிரசாரத்தின் போதே கிடைக்கப்பெற்றுள்ளதுடன், ஒன்று அரசாங்க உத்தியோகத்தர்கள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவது தொடர்பில் ஒரு முறைப்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.
20 minute ago
31 minute ago
38 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
31 minute ago
38 minute ago
57 minute ago