2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு மாதங்களில் 52 தற்கொலைகள்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 மே 07 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களில், 52 தற்கொலைகள் இடம்பெற்றுள்ளன எனவும், கடன் சுமையினாலே அதிக தற்கொலைகள் இடம்பெறுகின்றன எனவும், திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நசீர், இன்று (07) தெரிவித்தார்.
இவ்வாண்டு ஆரம்பம் முதல், நேற்று வரையிலான காலப்பகுதியில் கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையிலேயே இக்கருத்தை வெளியிட்ட அவர், நுண்கடன், வறுமை, போதைப்பொருள் பாவனை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோரே, மரணம் எனும் தவறான முடிவை எடுக்கின்றனர் எனக் குறிப்பிட்டார்.
“மட்டக்களப்பு மாவட்டத்தின் சமய, சமூகத் தலைமைகள், அரசியல் தலைமைகள் ஆகியன முன்வந்து, இம்மக்களுக்கு வாழ்வாதார வழிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம், நுன்கடன் திட்டத்திலிருந்து இம்மக்களைப் பாதுகாத்து, தற்கொலை முயற்சியிலிருந்து தடுத்துக் கொள்ளலாம்" என்று குறிப்பிட்டார்.
அதேபோன்று, குடும்பப் பிணக்குகளும் இளவயதுத் திருமணங்களும் பாலியல் தொல்லைகளும், இவ்வாறான தற்கொலைகளுக்குக் காரணங்களாக அமைந்துள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
“உயிரை மாய்த்துக்கொள்வது, ஒருபோதும் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையாது. எனவே, இதில் அனைவருக்கும் பொறுப்பு இருக்கின்றது. இதைக் கவனிக்க வேண்டும்” என, அவர் மேலும் தெரிவித்தார்.
தொடர்புகொள்க:
தற்கொலை செய்வதற்கான எண்ணங்களைக் கொண்டோர், இலங்கையில் தற்கொலை தொடர்பில் பணியாற்றிக் கொண்டிருக்கும், சுமித்ராயோ நிறுவனத்தைத் தொடர்புகொள்ள முடியும். ஆண்டின் 365 நாட்களும், காலை 9 மணிமுதல் இரவு 8 மணிவரை, 011 2692909, 011 2696666, 011 2683555 ஆகிய தொலைபேசி இலக்கங்களூடாகத் தொடர்பை ஏற்படுத்த முடியும். இவர்களை விட, மாவட்ட மட்டத்தில் இயங்கும் ஏனைய அமைப்புகளையும் தொடர்புகொள்ள முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .